தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நேற்று தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி, மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய அரசைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் - தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா
தென்காசி: தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி செங்கோட்டையில் சிஐடியு தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷம் எழுப்பினர். குறிப்பாக தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை கைவிடக் கோரியும், தடை உத்தரவைப் பயன்படுத்தி தொழிலாளர்களிடம் 12 மணி நேரம் வேலை வாங்குவதைக் கண்டித்தும் குரல் எழுப்பினர்.
இதையும் படிங்க:முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - சிஐடியு