தென்காசி: இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இயேசு கிறிஸ்துவின் போதனையான அன்பின் வழிகள் குறித்தும், அவர் சொல்லினக் கட்டளைகளை குறித்தும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்று கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் தின நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடடுகின்றனர்.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், வெள்ளாலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் இன்று அதிகாலையில் எழுந்து தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். மேலும் இன்றைய நாளில் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் தினம் வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் கிறிஸ்மஸ் தினம் டிசம்பர் மாதம் முழுவதும் தேவாலயங்களில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் அரங்கேறுவது வழக்கம், அதன்படி, கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னதாக கீத ஆராதனை சிறப்பு பிரார்த்தனை கூட்டம், ஒவ்வொரு கிராம பகுதிக்களுக்கும் சென்று ஏழை எளிய மக்களுக்கு அவர்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மூலம் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் உதவிகளை செய்தனர்.