தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கோவிலாண்டனூர் தேவாலயம் மற்றும் சேந்தமரம், புளியங்குடி பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், குழந்தை ஏசுவை வணங்கி கிறிஸ்தவர்கள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தென்காசியில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்! - சிறப்பு பிரார்த்தனை
தென்காசி கடையநல்லூர் பகுதியில் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
![தென்காசியில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்! Christmas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17309206-thumbnail-3x2-aspera.jpg)
Christmas
இதில் கடையநல்லூர், புளியங்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர். சிறியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஏசு கிறிஸ்துவை வழிபட்டு மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.