உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் தேவாலயங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களிலும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை: மும்முரமாக நடைபெறும் கேக் விற்பனை! - Tenkasi District News
தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் விற்பனையானது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மும்முரமாக நடைபெறும் கேக் விற்பனை
அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா தொற்று தாக்குதல் காரணமாக ஊரடங்கு நிலவி வருவதால், பல விழாக்கள் கொண்டாடபடுவதிலும் சிக்கல் நீடித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பண்டிகை நாட்கள் களைகட்ட தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:கிறிஸ்தவமும் தமிழ்நாடும்!