தென்காசி:ஆயிரமாண்டுகள் பழமையும், புகழும்வாய்ந்த சிவத் திருத்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் இன்று (ஏப். 7) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகள் திருவிழா நடைபெவில்லை.
இந்தாண்டு கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. முன்னதாக யானை பிடிமண் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலிருந்து சந்திரசேகர சுவாமி கோமள அம்பிகையுடன் சப்பரபவனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.