தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த ஜெபாஸ்டியன் - எஸ்தர் தம்பதியினரின் மகன் ஆரோன். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், இன்று மாலை அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள் உடன் ஆரோனும் சேர்த்து வீட்டு வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வாசலில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் எட்டி பார்த்தபோது குழந்தை தவறிவிழுந்துள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அருகில் இருந்த பெரியவர்களிடம் தெரிவித்ததை அடுத்து சிறுவனை மீட்ட பகுதி மக்கள் உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை மூச்சுத்திணறி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.