தென்காசிமாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு மாத காலம் தாமதமாக ஜூலை மாதம் தொடங்கியது குற்றால சீசன். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக காணப்படுகிறது.
இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிக அளவிலேயே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழைய குற்றால அருவிகளில் கார் பார்க்கிங், கடைகள் என அதிகளவு ஏல முறையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கார் பார்க்கிங் கட்டண வசூலாக 20 முதல் 100 வரை வசூல் செய்யப்படுகிறது.
அவ்வாறு கார் பார்க்கிங் கட்டணம் குறிப்பிட்ட கிலோ மீட்டர் முன்னதாகவே வசூல் செய்வதால் விடுதிகளுக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் கட்டணம் செலுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் குளிப்பதற்கு கார்களில், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகளிடம் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதுடன் அருவிகளில் மேற்பகுதியில் இடம் இருந்தும், அதனை அருவிகளின் அருகே வரை அனுமதிக்கப்படாத நிலை நீடித்து வருகிறது.