தென்காசி:சங்கரன்கோவில் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று அதிக பயணிகள் கூட்டத்துடன் சென்று கொண்டிருந்து. இந்நிலையில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலணி பகுதியில் பேருந்து திடீரென திரும்பியபோது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கையில் இருந்த 2 வயது குழந்தை நிலைதடுமாறி பேருந்தின் படிக்கட்டு வழியே கீழே விழுந்தது. அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் இதை கண்டவுடன் ஓடிச்செற்று குழந்தையை தூக்கியதால் குழந்தை பேருந்துக்கு அடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டது. இந்த விபத்தில் காயங்கள் ஏதும் இன்றி குழந்தை உயிர் தப்பியது.