தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு! - ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

தென்காசி: நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

surya fans
surya fans

By

Published : Sep 19, 2020, 3:31 AM IST

Updated : Sep 19, 2020, 3:51 AM IST

தமிழ்நாட்டில் கடந்த 12ஆம் தேதி நீட் தேர்வு அச்சத்தால் மூன்று மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகளை தடுக்க தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்க அளிக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

சமீபத்தில் நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், நீதிமன்றத்தை விமர்சித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வந்தது.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக, அவரது ரசிகர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என "அரசாங்கம் பேசுகிறதோ இல்லையோ அகரம் பேசும்" உள்ளிட்ட வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

சூர்யாவின் ரசிகர்கள்

இதனைக் கண்ட தென்காசி நகர காவல் துறையினர், இந்த சுவரொட்டிகள் காவல் துறையால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் விதிமீறி ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:'காவல் துறையில் திறமையான அலுவலர்களுக்கு பஞ்சமில்லை'

Last Updated : Sep 19, 2020, 3:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details