தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடு வயிற்றில் இருந்த கேன்சர் கட்டி அகற்றம் - கால்நடை மருத்துவருக்கு குவியும் பாராட்டு! - பசு வயிற்றில் இருந்த கேன்சர் கட்டி அகற்றம்

தென்காசி: பசுவின் வயிற்றுப் பகுதியில் ஒட்டியிருந்த சுமார் 3 கிலோ எடையிலான கேன்சர் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

cow surgery
cow surgery

By

Published : May 12, 2020, 11:38 PM IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, ரெட்டியார்பட்டிக்கு அருகிலுள்ள வடக்கு காவலாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துபாண்டி. இவரது பசுவின் வயிற்றில் உடம்போடு ஒட்டியிருந்த மரு போன்ற சதைப்பகுதியில் வெகு நாட்களாக ஆறாமல் இருந்த புண் கடந்த சில வாரங்களில் பெரிதாகி வீங்கியுள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி, உடனடியாக அருகிலுள்ள வெண்ணிலிங்கபுரம், அரசு கால்நடை மருத்துவர் ராஜேஷியிடம் பசுவைக் காண்பித்தார். பசுவை பரிசோதித்த மருத்துவர், கேன்சர் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, பசுவிற்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

முத்துபாண்டியின் இல்லத்தில் வைத்தே வெற்றிகரமாக, இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3 கிலோ எடையுள்ள கேன்சர் கட்டி அகற்றப்பட்டது. இதுகுறித்து விவசாயி முத்துபாண்டி கூறுகையில், "இந்தக் கட்டி காரணமாக பசுவை விற்றுவிட முடிவெடுத்தேன். நல்ல கறவை உள்ள பசு என்பதால் விற்க மனமில்லாமல் இருந்தேன்.

நல்ல வேளையாக, தற்போது இந்த கேன்சர் கட்டி பசுவின் உடம்பிலிருந்து அகற்றப்பட்டு விட்டது. இனிமேல், இந்தப் பசுவை நான் விற்கப் போவதில்லை" என மகிழ்ச்சியுடன் கூறினார். அறுவை சிகிச்சைக்குப் பின், பசு மயக்கம் தெளிந்து சகஜ நிலைக்குத் திரும்பியது. கரோனா சமயத்திலும் கால்நடை மருத்துவரின் இச்சேவையை மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதையும் படிங்க:பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மே 26இல் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details