தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து கட்டணம் உயர்வு மக்களை பாதிக்கும்: ஓ.பன்னீர்செல்வம் - பேருந்து கட்டணம் உயர்வு மக்களை பாதிக்கும்

பேருந்து கட்டணம் உயர்வு மக்களை பாதிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி வருகை
எடப்பாடி பழனிசாமி வருகை

By

Published : May 15, 2022, 9:36 AM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே வன்னிக்கோனேந்தலில் உள்ள அதிமுக நிர்வாகி ஒருவர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டி வழியாக நேற்று (மே.14) மாலை சங்கரன்கோவில் வந்தார்.

அப்போது கழுகுமலை சாலையில், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அவர் சங்கரன்கோவில் விடுதியில் தங்கியிருந்த அதிமுக ஒருங்கிணைப்பானர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அதன்பிறகு இருவரும் வன்னிக்கோனேந்தலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

எடப்பாடி பழனிசாமி வருகை

அப்போது செய்தியாளர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், பேருந்து கட்டண உயர்வு குறித்து கேட்டபோது, மக்களை பாதிக்காத பேருந்து கட்டணம் உயர்வு எப்படி சாத்தியமாகும். கட்டணம் உயர்ந்தாலே அது மக்களைப் பாதிக்கத்தான் செய்யும் என்றார்.

இதையும் படிங்க:முருகனின் உயிருக்கு ஆபத்து: சிறை கைதிகள் உரிமை மையம் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details