தென்காசி: செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கலங்காதகண்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்(81), அவரது மகன் துரை(49) ஆகியோரை பரமக்குடியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு அவரது உரிமையாளரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆனால் தந்தை, மகன் இருவரும் பணத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கு வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கனகராஜ், இருவரிடமும் 'வேலைக்கு வாருங்கள் இல்லாவிட்டால் பணத்தை திருப்பிக் கொடுங்கள்' எனக் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பு: இந்நிலையில், 2012ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி கனகராஜ், அவரது வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த ராஜ், துரை இருவரும் அரிவாளால் கனகராஜை வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த கனகராஜ், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.