தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி இடைத்தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் - எல்.முருகன் - தென்காசி பாஜக உறுப்பினர்கள்

தென்காசி: சங்கரன்கோவிலில் தொண்டர்களை சந்திக்க வருகைபுரிந்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

தொண்டர்களை சந்திக்க தென்காசி வருகைபுரிந்த பாஜக மாநிலத் தலைவர்
தொண்டர்களை சந்திக்க தென்காசி வருகைபுரிந்த பாஜக மாநிலத் தலைவர்

By

Published : Sep 22, 2020, 12:40 AM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தொண்டர்களை சந்திக்க வருவதாக இருந்த நிலையில் தேரடி திடலில் பெண்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.

இந்நிலையில் ராஜபாளையம் சாலையில் வந்த பாஜக மாநிலத் தலைவரை, காவல் துறையினர் ஒருவழிப்பாதையில் செல்லக்கூடாது எனக் கூறி திருநெல்வேலி சாலையில் வாகன தடத்தை மாற்றியமைத்துள்ளனர். இதனையறிந்த பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் மாற்று வழியில் வந்த தமிழ்நாடு பாஜக தலைவருக்கு கோலகலமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். தொண்டர்கள் அனைவரும் உத்வேகத்துடன் செயல்படுகிறார்கள். பழைய கூட்டணி மீண்டும் தொடரும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவறாக பரப்புரை செய்யும் எதிர்க்கட்சிகள் - தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்

ABOUT THE AUTHOR

...view details