தென்காசி:தமிழக கேரள எல்லைப் பகுதியான கோட்டைவாசல் வழியே, தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு தொடர்ந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த சூழலிலும், மீண்டும் கேரளாவிற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 4) தமிழக கேரள எல்லைப் பகுதியான கோட்டைவாசல் பகுதியில் பாஜகவினர் கனிமவளங்கள் கொள்ளைக்கு கண்டனம் தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக செல்லும் போக்குவரத்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டது.