தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி: கரோனா ஊரடங்கு காலத்தில் நுண் நிதி நிறுவனங்கள் அடாவடியாக கட்டாய கடன் வசூலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் பெற்று தரக்கோரியும் 50-க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 27, 2020, 7:40 PM IST

தென்காசி மாவட்டத்தில் சுரண்டை, ஆலங்குளம், செங்கோட்டை, தென்காசி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிதி நிறுவனங்களிடம் சுய உதவிக் குழு பெண்கள், பீடி தொழிலாளர்கள் கடன் பெற்று அதனை மாத தவணை முறையில் செலுத்திவருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் வேலையிழந்து தவித்துவரும் நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் பீடி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நுண் நிதி நிறுவனங்கள் அடாவடியாக கடன் வசூலில் ஈடுபடுவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நுண் நிதி நிறுவனங்கள் அரசின் உத்தரவை மீறி கரோனா காலத்தில் சுய உதவிக் குழு பெண்களிடம் அடாவடியாக ஆபாசமாக பேசி தற்கொலைக்குத் தூண்டும் வகையில் கட்டாய வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தரமற்ற பீடி இலைகளை வழங்கி கூலி குறைப்பு செய்வதைத் தடுக்க வேண்டும், பீடித் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: திருமாவளவனின் உருவ பொம்மை எரிப்பு: பாஜகவினர் கைது!

ABOUT THE AUTHOR

...view details