தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், தென்னை, மா, வாழை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் சமீபகாலமாக காட்டுப்பன்றிகள் புகுந்து விளைச்சலை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) தமிழ்நாடு - கேரளா எல்லையான புளியரை அருகே தெற்குமேடு பகுதியில் கரடி ஒன்று தென்னந்தோப்புக்குள் புகுந்தது.
தென்காசி அருகே தென்னை மரத்தில் ஏறி பதுங்கிய கரடி - thenkasi bear
தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் தென்னந்தோப்புக்குள் புகுந்த கரடி, விவசாயிகள் சத்தம் எழுப்ப தென்னை மரத்தில் ஏறி பதுங்கிக்கொண்டது.
தென்காசி அருகே தென்னை மரத்தில் ஏறி பதுங்கிய கரடி
இதைக்கண்ட விவசாயிகள் சத்தமிட கரடி தென்னை மரத்தில் ஏறி பதுங்கியது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வெடி வெடித்தும், ஒலி எழுப்பியும் கரடியை காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும், கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து மீண்டும் இப்பகுதிக்கு வருவதை தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உலக யானைகள் தினம்: அபயாம்பாள் யானைக்கு கஜ பூஜை!