தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளைச்சல் இருக்கு விற்பனை இல்லை: விவசாயிகள் வேதனை - ஊரடங்கு உத்தரவினால் வாழை விவசாயிகள் வேதனை

தென்காசி: விளைச்சல் அதிகளவில் இருந்தும் ஊரடங்கு உத்தரவினால் தங்களால் உரிய விலையில் விற்பனை செய்ய இயலவில்லை என வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

banan-growers-faces-many-financial-problems-due-to-curfew
banan-growers-faces-many-financial-problems-due-to-curfew

By

Published : Apr 10, 2020, 11:16 AM IST

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவகையில் இருப்பினும், மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்துவருகின்றனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

ஊரடங்கு உத்தரவினால் வாழை விவசாயிகள் வேதனை

அந்தவகையில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். போதிய மழை பெய்து அதிகளவில் விளைச்சல் இருந்தபோதிலும், தங்களால் உரிய விலைக்கு வாழை மற்றும் அதன் உதிரி பொருள்களை விற்பனை செய்யமுடியவில்லை. அறுவடை செய்த வாழைகளை விற்பனை செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாலை நேரத்தில் அதிக காற்று வீசி மரங்களும் சேதமாகியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.

விவசாயிகளின் நிலை உணர்ந்து அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நாள்தோறும் இழப்பினை சந்திக்கும் மலர் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details