இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை செய்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
இந்தாண்டு கரோனா ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் தொழுகை நடத்த அரசு தடை விதித்துள்ளது. அதனால் இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.