தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கரன்கோவிலில் இருபிரிவினரிடையே மோதல்: செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் - சங்கரன்கோவிலில் மோதல்

சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாங்குளத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர்.

செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல்
செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல்

By

Published : Mar 7, 2022, 11:07 PM IST

தென்காசி:திருவேங்கடம் அருகே குறிஞ்சாங்குளத்தில் காந்தாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இருபிரிவினரிடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. இதனிடையே கடந்த மாதம் குறிஞ்சாங்குளம் மைதானத்தில் விழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருபிரிவினர் அங்கு விழா நடத்தினர்.

சங்கரன்கோவிலில் மோதல்

இந்நிலையில் இன்று (மார்ச் 7) மற்றொரு பிரிவினர் குறிஞ்சாங்குளத்தில் உள்ள காலி மைதானத்தில் அங்கன்வாடி உள்ளிட்டவை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். பின்னர் குறிஞ்சாங்குளத்திற்கு அவர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல்

அப்போது ஒருபிரிவினர் தங்கள் பகுதியில் கட்சிக் கொடியை ஏற்றிக் கொண்டிருந்தனர். திடீரென்று காரில் வந்தவர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காவல்துறை குவிப்பு

இதை தொடர்ந்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர். உடனே அங்கிருந்த காவல் துறையினர் செய்தியாளர்களை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். இதையடுத்து அங்கு 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் குறிஞ்சாங்குளத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காதலுக்காக கர்நாடகா சென்ற அமைச்சர் சேகர் பாபுவின் மகள்!

ABOUT THE AUTHOR

...view details