தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் முதல் இளம் பஞ்சாயத்துத் தலைவர் - பதவியேற்ற அனு

தமிழ்நாட்டின் முதல் இளம் பஞ்சாயத்துத் தலைவியாக, தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி பெண் "அனு"பதவி ஏற்றார்.

பஞ்சாயத்துத் தலைவர்
தென்காசி மாவட்டம், தெற்குமேடு ஊராட்சி மன்றத்தின் தலைவியாகிறார்

By

Published : Oct 20, 2021, 9:47 PM IST

Updated : Jun 27, 2022, 1:13 PM IST

தென்காசி:தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாகப் பல்வேறு ஊராட்சிகளில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகில் தமிழ்நாட்டின் முதல் இளம் பஞ்சாயத்துத் தலைவியாக பட்டதாரிப் பெண் ஒருவர், வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்குமேடு ஊராட்சி மன்றத் தேர்தலில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் அனு (21) கத்தரிக்காய் சின்னத்தில் போட்டியிட்டார்.

21 வயதே ஆன அனு இளங்கலை - ஆங்கிலம் பட்டப்படிப்பை முடித்துள்ளார்; தேர்தல் முடிவில் மொத்தம் 534 வாக்குகள் பெற்று, அனு வெற்றி பெற்றார். இரண்டாவதாக, செல்வராணி என்பவர் 285 வாக்குகள் பெற்றிருந்தார்.

பதவியேற்பு

தமிழ்நாட்டின் முதல் இளம் பஞ்சாயத்துத் தலைவியாக பட்டதாரிப் பெண் பதவி ஏற்றார்

இன்று தெற்குமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், அனு பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலை நாட்டுவேன் என்றும்; நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதி ஏற்றுக் கொண்டார்; தொடர்ந்து அனுவுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தையைப் போல நல்லது செய்வேன்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த

பொதுவாக பொதுத்தேர்தலில் போட்டியிட 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.

பெரும்பாலும் உள்ளாட்சித் தேர்தலில் வயது மற்றும் அனுபவத்தில் மூத்தவர்களே போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். ஆனால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை அடைந்த முதல் ஆண்டிலேயே அனு வெற்றிப் பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

அனுவின் தந்தை கண்ணன், ஏற்கெனவே தெற்குமேடு ஊராட்சி மன்றத்தில் மூன்று முறை வெற்றி பெற்று பஞ்சாயத்துத் தலைவராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அனு கூறுகையில், 'சிறு வயதில் இருக்கும்போதே, தனது தந்தை தலைவராக ஊர் மக்களுக்கு நல்லது செய்வதைப் பார்த்து வந்ததாகவும்; தற்போது தேர்தலில் நிற்பதற்கான வயது எட்டியதால் தந்தையின் ஆசியுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்றதாகவும்' என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 22 வயதில் பஞ்சாயத்து தலைவர் பதவி - என்ன செய்ய போகிறார் ஸாருகலா?

Last Updated : Jun 27, 2022, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details