தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ் புத்தாண்டில் ஊழலுக்கு எதிரான திருவிழா - திமுக புள்ளிகளின் சொத்து பட்டியல் வெளியீடு" - அண்ணாமலை சூசகம்! - அண்ணாமலை கண்டனம்

தமிழ் புத்தாண்டு ஊழலுக்கு எதிரான திருவிழா என்றும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, திமுகவின் 27 முக்கிய புள்ளிகளின் சொத்துப் பட்டியலை வெளியிடப் போவதாகவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 25, 2023, 8:56 AM IST

Updated : Mar 25, 2023, 9:41 AM IST

"ஏப்.4-ல் திமுக புள்ளிகளின் சொத்துப் பட்டியல் வெளியிடுவோம்" - அண்ணாமலை

தென்காசி: ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ் புத்தாண்டில் 27 திமுக புள்ளிகளின் சொத்துப் பட்டியலை வெளியிடுவோம் என்றும் அந்நாள் ஊழலுக்கு எதிரான திருவிழாவாக இருக்கும் என்றும் தென்காசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச்.24) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மாற்றம் நடந்துவிட்டது என்பதை இக்கூட்டம் உணர்த்துகிறது. நீட் (NEET Exam) வேண்டும் என 2010-ல் கையெழுத்து போட்டு அதனைக் கொண்டு வந்தது, திமுக. நீட் தேர்வால் தற்கொலை செய்த குழந்தைகளை வைத்து அரசியல் செய்து சடலத்தின் மூலம் வாக்கு பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது.

சரித்திரத்தை மாற்றுவது, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சரித்திரம் உருவானது என்று சொல்வது பொய் சொல்லி மாட்டிக் கொண்டால், அதனை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்குவது உள்ளிட்ட மூன்று முகங்களை கொண்டது தான் திமுக என்று கடுமையாக சாடினார். அதனை உடைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மாடல் பள்ளி தேர்வும் நீட் தேர்வும்:மேலும் பேசிய அவர், அரசால் புதிதாக தொடங்கப்பட்ட மாடல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக நுழைவு தேர்வு வைத்து மாணவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர்களிடம் கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை என பொய் சொல்வதாகவும், மாடல் பள்ளி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுமென்றால் எங்களுக்கு நீட் வேண்டும் என்றும் பேசினார்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உள்கட்டமைப்பு மட்டும்தான் இல்லை எனவும் வருகிற 2026 மார்ச் மாதத்திற்குள் எய்ம்ஸ்க்கான முழு உள்கட்டமைப்பும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

திமுக புள்ளிகளின் சொத்துப் பட்டியல் ரெடி:தமிழ்நாட்டில் சாராயம் விற்று வருவாய் ரூ.46 ஆயிரம் கோடி உள்ளது என்றும், மக்கள் பயன்பாட்டிற்கு அந்த தொகையில் இருந்து ரூ.2000 கோடியை மட்டும் மத்திய அரசிற்கு கொடுத்தால் விரைவில் மிகப்பெரிய அளவிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டின் ஜிடிபியில் 10 சதவீதம் அளவிற்கு இரண்டு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் திமுகவின் முக்கிய புள்ளிகள் 27 நபர்களிடம் உள்ளதாகவும், இவை குறித்து வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் புத்தாண்டு ஊழலுக்கு எதிரான திருவிழாவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதற்கு பிறகு, பாஜகவின் அரசியல் என்னவென்று அவர்களுக்கு தெரியும் என்றும் அனைத்து பொய்களையும் வைத்து திமுகவை கட்டமைத்துள்ளதாகவும் அவர் சாடினார்.

வயநாட்டுக்கு தேர்தல்:ராகுல்காந்தியின் பதவி பறிப்பு குறித்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாகியதாகவும், ராகுல்காந்தி பேசிய வார்த்தைக்காக தொடரப்பட்ட வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு நாடாளுமன்ற சபாநாயகர் எடுத்த நடவடிக்கையால் மறுபடியும் வயநாட்டுக்கு தேர்தல் வரவுள்ளதாகவும், இந்தியாவில் மொத்தம் ஒன்பது எம்பிக்களும், 4 எம்எல்ஏக்களும் இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸின் நிலைமை ஐயோ பரிதாபம் ஆகியதோடு, ஐசியுவில் ஆக்சிஜன் கொடுக்கும் நிலையில் உள்ளதாகவும் விமர்சித்தார்.

அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை நிறுத்திவிட்டு அந்த நிதியிலிருந்து கடலில் 'பேனா சிலை' வைக்க முயற்சி நடப்பதாகவும், இதுவே திமுகவின் அழிவுக்கு ஆரம்பமாகும் என்றும் கடுமையாக விமர்சித்தார். வருகிற 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் தண்ணீர் கொடுக்கும் 'ஜல் ஜீவன் திட்டம்' நிறைவேற்றப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

2024-ல் நம்பிக்கை மாற்றம் நாட்டின் முன்னேற்றம் ஆகிய மூன்றையும் பார்த்து மக்கள் வாக்கு பெட்டியில் தாமரை சின்னத்தை அழுத்த போகின்றனர் என்றும் தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் நமக்குள்ளதாகவும் கூறினார். திமுகவின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் திமுக எந்த அஸ்திரத்தை எடுத்தாலும் நாம் பார்த்துக் கொள்வோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராகுல் காந்தியின் பதவி பறிப்பு.. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்..

Last Updated : Mar 25, 2023, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details