தென்காசி: கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கோட்டைமலை ஆற்றின் அடிவாரத்தில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டபோது இறந்திருந்தது 35 வயது பெண் யானை என்பது தெரிய வந்தது.
தென்காசி மலைப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த யானை! - latest tamil news
தென்காசி வனப்பகுதியில் 35 வயது பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த யானை
இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு நடைபெற்றது. இந்த யானை இறந்து 2, நாட்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உடல் உபாதை காரணமாக இறந்ததா இல்லை யானைகளுக்குள் சண்டை ஏற்பட்டு இறந்ததா என்பது குறித்து உடற்கூராய்வுக்குப் பிறகே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கருப்பன் யானையை துரத்த வந்த கும்கி