தென்காசி:குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பழைய குற்றால அருவி மற்றும் புலி அருவியில் நீர் வரத்து சீராக கொட்டியதால் சுற்றுலாப்பயணிகள் அங்கு குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்று மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு சற்று குறைந்து காணப்படுவதால் அருவிக்கு வரும் நீரின் வரத்தும் சற்று குறைந்து காணப்பட்டது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்குப்பிறகு அனுமதி இதனால் கடந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்படுகிறார்கள். தொடர்ந்து குற்றாலம் சுற்று வட்டாரப்பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க:பாரதியாருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர்