தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியாயவிலைக்கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் - Tenkasi Latest News

தென்காசி: சங்கரன்கோவில் அருகே கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் நியாயவிலைக்கடை திறக்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் கறுப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Alangulam black flag protest
Alangulam black flag protest

By

Published : Aug 27, 2020, 7:25 AM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த மறைந்தமுன்னாள் அமைச்சர் சொ. கருப்பசாமியின் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து நியாயவிலைக்கடை கட்டப்பட்டது.

இந்த நியாயவிலைக்கடை கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத நிலையில் உள்ளது. கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் பயன்படாத சூழ்நிலை உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் 13 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடிக்கப்பட்டு நியாயவிலைக்கடை திறக்கப்படாததைக் கண்டித்து கடை முன்பு கறுப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து நியாயவிலைக் கடையைத் திறக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details