தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடிப்பெருக்கு: களையிழந்து காணப்படும் குற்றால அருவி - Tanjore District News

தென்காசியில் ஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கு நாளான இன்று (ஆகஸ்ட் 02) குற்றால அருவிகளில் களையிழந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

குற்றால அருவி
குற்றால அருவி

By

Published : Aug 2, 2020, 2:49 PM IST

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டி காணப்படும். குறிப்பாக, ஆடி மாதங்களில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டமானது அலைமோதிக் காணப்படும்.

இந்நிலையில், ஆடிப்பெருக்கு நாளான இன்று (ஜூலை) அருவிகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தை வரவேற்கும் விதமாக, குற்றால அருவிகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவது வழக்கம்.

அப்போது ஆற்றங்கரையோரம் நீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, பெண்கள்தாலியை மாற்றிக்கொள்வார்கள், சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் எனவும் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வேண்டிக்கொள்வார்கள். ஆனால், தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வருகையின்றி குற்றால அருவிகளில் களையிழந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

வெறிச்சோடிக் காணப்படும் கல்லணை

அதுபோல தஞ்சை கல்லணையும், ஊரடங்கு காரணமாக புதுமணத் தம்பதிகள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதையும் படிங்க:ஆடிப்பெருக்கு: ஊரடங்கு உத்தரவை மீறி காவிரி துலாக்கட்டத்தில் குவிந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details