தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்துக்களை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை விளக்குகள்! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்

தென்காசி: மாவட்ட நகர் பகுதியில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் 10க்கும் மேற்பட்ட எச்சரிக்கை விளக்குகளை உதவி காவல் கண்காணிப்பாளர் தொடக்கிவைத்தார்.

விபத்துகளை தவிர்க்கும் எச்சரிக்கை விளக்குகள்!
விபத்துகளை தவிர்க்கும் எச்சரிக்கை விளக்குகள்!

By

Published : Oct 23, 2020, 2:59 PM IST

தென்காசி மாவட்டம் நகர் பகுதியில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்ட நகர்ப்பகுதிகளில் உள்ள அபாயகரமான வளைவுகளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களை தவிர்க்கும் விதமாக எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இந்த எச்சரிக்கை விளக்குகள் குத்துக்கல்வலசை, தென்காசி பழைய பேருந்து நிலையம், குற்றாலம் சாலை உள்ளிட்ட 12 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றை தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் இன்று (அக்டோபர் 22) தொடக்கிவைத்தார். மேலும், வாகன ஓட்டிகளுக்கு 500 மீட்டருக்கு முன்பே இது விபத்து பகுதி என எச்சரிக்கை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விபத்துக்கள் கட்டுப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details