தென்காசி: வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் - மீனா தம்பதியினர். முருகன் தனியார் ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் கூலி விலை செய்து வருகிறார். இருவருக்கும் காதல் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், பிரியா (7) மற்றும் மோனிகா (1) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின் முருகன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது இரவில் மனைவி, குழந்தை யாரும் இல்லாததால் சுற்றுப்பகுதியில் தேடியுள்ளார். அப்போது அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகளுடன் மீனா மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.