தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக மகளிர் அணி தலைவி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - தகாத உறவால் நடந்த கொலை! - woman body being found near the railway tracks

சங்கரன்கோவில் ரயில்வே தண்டவாள பகுதியில் பெண் சடலமாக கண்டெடுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்து காட்டுப் பகுதிக்குள் பெண்ணின் சடலம் வீசப்பட்டதை கண்டுபிடித்த போலீசார் சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்தனர்.

தென்காசி பாமக அணி தலைவியின் சடலம் மீட்பு
தென்காசி பாமக அணி தலைவியின் சடலம் மீட்பு

By

Published : Mar 5, 2023, 11:06 AM IST

தென்காசி:சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி மாரியம்மாள். பாட்டாளி மக்கள் கட்சியின் தென்காசி மாவட்ட மகளிர் அணி தலைவியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 3 ஆம் தேதி சங்கரன்கோவில் அருகே உள்ள இலவன்குளம் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே பெண் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக ஆடு மாடு மேய்ப்பதற்காக சென்ற நபர்கள் பெண் சடலம் கீழே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடந்துள்ளனர். பின்னர் உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் உயிரிழந்தவரின் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த வாகனத்தில் இருந்த அவரது ஆவணங்களை எடுத்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை சோதனை செய்தனர். அதில் அவர், தென்காசி மாவட்டம் பாமக மகளிர் அணி தலைவியாக இருக்கும் மாரியம்மாள் என்பது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து அவரது உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மாளின் சடலம் உடல் கூராய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, மாரியம்மாளுக்கும் புளியம்பட்டியைச் சேர்ந்த முத்துக்காலாடி என்பவருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலின்படி காவல்துறையினர் முத்துகாலடியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதலில் எதுவும் தெரியாது எனக் கூறிய அவர், தீவிர விசாரணைக்கு பின் அனைத்தையும் கூறியுள்ளார்.

அவ்வாறு அவரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியாகியுள்ளன. கணவனை இழந்த மாரியம்மாளுக்கும், மனைவியை இழந்த முத்துக்காலடி ஆகிய இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காலப்போக்கில் தகாத உறவாக மாறி உள்ளது, அதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து முத்துக்காலடி திடீரென மாரியம்மாள் நடத்தையின் மீது சந்தேகப்பட்டதின் காரணமாக மாரியம்மாளை தனியாக தோட்டத்திற்கு வரவழைத்து தோட்டத்தில் இருந்த கயிற்றால் மாரியம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவனது நண்பரான சுப்பையா உதவியுடன் இரவு நேரத்தில் மாரியம்மாளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் இருவரும் ரயில்வே தண்டவாளம் அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் வீசி சென்றதாக விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து.. ஒருவர் பலி!

ABOUT THE AUTHOR

...view details