தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் காவலர் பலி! - death

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காவலர் உயிரிழந்தார்.

death
சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் காவலர் பலி

By

Published : May 9, 2023, 3:27 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே வடக்கு பணவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைப் பாண்டி என்பவரது மகன் பாலசுப்ரமணியம் (35). அய்யாபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் அய்யாபுரம் காவல் நிலையத்திலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பாலசுப்ரமணியம் தினசரி தனது வேலையை முடித்த பின்பு, தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். பெரும்பாலான காவலர்கள் அங்குள்ள குடியிருப்புப் பகுதியிலே தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், பாலசுப்ரமணியம் காவலர், தனது ஊர் அருகே உள்ளதால், தினசரி இருசக்கர வாகனத்தில் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதே போல் நேற்றைய தினம் அவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, திருநெல்வேலி சாலையில் சின்ன கோவிலாங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் பாலசுப்ரமணியம் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அதைத் தொடர்ந்து படுகாயங்களுடன் சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காவலரை, அந்த வழியாக வந்த பொதுமக்கள் 108 அவசர வாகனத்திற்கு தகவல் தெரிவித்து, உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலசுப்ரமணியம் ஏற்கனவே இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் உடலை உடராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பாலசுப்ரமணியம் அவரது மனைவி பெரிய தாய் இருவருமே காவல்துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. பணியில் இருக்கும் காவலர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்திருப்பது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காவல்துறையினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: NIA Raids: பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் கைது?

ABOUT THE AUTHOR

...view details