தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிவுரை வழங்கிய தந்தையை அடித்துக் கொன்ற மகன்! என்ன காரணம்? - mentally challenged son stoned his father to death

Son Kills Father For Giving Advice: தென்காசியில் மருந்து, மாத்திரையை சரியான நேரத்தில் உட்கொள்ள அறிவுரை வழங்கிய தந்தையை மனநலன் பாதித்த மகன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mentally ill son beats father to death for giving advice
அறிவுரைக் கூறிய தந்தையை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கல்லால் அடித்துக் கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 4:12 PM IST

தென்காசி: சாம்பவர்வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 74). இவரது மகன் சக்திவேல், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில், சக்திவேல் தனியாக வசித்து வந்துள்ளார். சக்திவேலின் இந்த நிலையைக் கண்ட அவரது தந்தை கருப்பசாமி, அவரை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார்.

ஆனால் சக்திவேல் மனநல ஆலோசகர் கொடுத்த மருந்து, மாத்திரைகளை சரிவர சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தந்தை கருப்பசாமி, சக்திவேலைக் கண்டித்து, நேரத்திற்கு மருந்து, மாத்திரைகளை சாப்பிடுமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள சக்திவேல் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தில் இல்லை எனத் தெரிகிறது. தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக்திவேல், கல்லால் அடித்துக் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த வகையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாம்பவர்வடகரை போலீசார், கருப்பசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கொலை செய்த அவரது மகன் சக்திவேலை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருந்து மாத்திரையை சரியான நேரத்தில் உட்கொள்ள அறிவுரை வழங்கிய தந்தை, மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சாம்பவர்வடகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நாட்டு வைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட எலும்பு கூடு..! மற்றொரு மண்டை ஓடு கிடைத்ததால் பதற்றம்!

ABOUT THE AUTHOR

...view details