தென்காசி:சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (29). இவரும் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரும் நேற்று (நவ.27) நள்ளிரவில் மது அருந்திவிட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், சிவகுமாரை செல்வகுமார் அரிவாளால் வெட்டிகொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றிய சிவகிரி காவல்துறையினர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செல்வகுமாரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருமணத்திற்கு வற்புறுத்தல்..பெண்ணுக்கு கத்திக் குத்து.. இளைஞர் கைது..