தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துத் தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர் - நடந்தது என்ன? - Puliyangudi police

தென்காசி அருகே சொத்து தகராறில் தன் அண்ணன் மகனையே சித்தப்பா வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

a man murder his own brother son
சொத்து தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர்

By

Published : Aug 11, 2023, 2:45 PM IST

சொத்து தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர்

தென்காசி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்து சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகன் இளையராஜா(19), மகள் மகாலட்சுமி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீராசாமி உடன்பிறந்த செல்லசாமி என்பவருக்கும் 2 பிள்ளைகள் உள்ளனர். இவரும் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் குடும்ப சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக அண்ணன் தம்பிகளான வீராசாமி மற்றும் செல்லசாமி ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி முன் விரோதம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்த புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புளியங்குடி காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும் இரு குடும்பத்தாருக்கும் இடையே தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 11ஆம் தேதி) காலை இடத்தகராறு காரணமாக வீராச்சாமி மகன் இளையராஜா என்பவருக்கும், அவருடைய சித்தப்பாவான செல்லசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த செல்லசாமி தன் அண்ணன் மகனான இளையராஜாவை அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து வெட்டியுள்ளார்.

இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து உள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவல் அறிந்த உடனே வந்த காவல்துறையினர், இறந்த இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையிலான காவல்துறையினர் செல்லசாமியை கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது குடும்பத் தகராறில் தன் அண்ணன் மகனையே வெட்டி கொன்ற சம்பவம் சிந்தாமணி பகுதியில் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன்பு இந்த பிரச்சினை தொடர்பாக வீராசாமியின் குடும்பத்தார், புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனவும், மேலும் காவல்துறையின் அலட்சியத்தால் தன் மகன் உயிர் பிரிந்ததாகக் கூறி இறந்த மகனின் தாய் கதறி அழுத காட்சி பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சில மணி நேரங்களிலே புளியங்குடி காவல் துறையினர் சுப்பிரமணியபுரம் அருகில் செல்லச்சாமி என்பவரை அதிரடியாக கைது செய்தனர். இருப்பினும் தற்போது தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்றுவருதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பெண் வீட்டாரிடம் தன்னைப்பற்றி தவறாகக் கூறிய நபரை வெட்டிக்கொன்ற இளைஞர் - நெல்லையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details