தென்காசி: ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவர் வாங்கிய 10 ஆயிரம் ரூபாய்க்கு வார வாரம் 300 ரூபாய் வீதம் வட்டி கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 2 ஆண்டுகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக வட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு வாரங்களாக வட்டி பணம் கொடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த நந்தகுமார், தனது உறவினர்களுடன் சேர்ந்து கூலித் தொழிலாளியை ரோட்டில் வைத்து தாக்கியதில், அவர் நிலை குலைந்தார். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.