தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி எம்.எல்.ஏவுக்கு சொந்தமான டிராக்டர் மோதி சிறுவன் பலி! - 4 year old boy killed in MLA tractor collision

சுரண்டையில் எம்.எல்.ஏவுக்கு சொந்தமான டிராக்டர் மோதியதில் 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி எம்.எல்.ஏவுக்கு சொந்தமான டிராக்டர் மோதி சிறுவன் பலி
தென்காசி எம்.எல்.ஏவுக்கு சொந்தமான டிராக்டர் மோதி சிறுவன் பலி

By

Published : Nov 24, 2022, 4:19 PM IST

தென்காசி: சுரண்டை அருகே உள்ள கீழச்சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை. இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவியும், ராஜமுகன் (4) என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ராஜமுகன் மீது டிராக்டர் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராஜமுகன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சுரண்டை போலீசார் டிராக்டர் டிரைவர் சங்கரன்கோவில் அருகில் உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் பாக்கியசாமியை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் ராஜமுகன் உயிரிழப்புக்கு காரணமான டிராக்டர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) பழனி நாடாருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:10-ம் வகுப்பு மாணவன் பிறப்புறுப்பில் தாக்குதல்.. சென்னை மத்திய அரசுப்பள்ளியில் கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details