தென்காசி: ராமநாதபுரம் அழகன்குளத்தைச் சேர்ந்தவர், முகைதீன் ஆசீர். தனது குடும்ப உறுப்பினர்கள் முகம்மது காசிம், முகம்மது ஆசீம், அஸ்ரா, நூகுஜிதீன், அப்ரா, சித்திக் ரூக்னையா, மரியம் சித்திகா, முகம்மது ரிஸ்வான், ஆகியோர் உள்பட 10 பேருடன் சேர்ந்து கேரளாவில் உள்ள சுற்றுலா ஸ்தலமான பாலருவிக்கு காரில் சென்றுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பிரதான சாலையில் முகைதீன் ஆசீர் சென்றபோது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து உருண்டு விபத்துக்குள்ளானது.
டயர் வெடித்து கார் விபத்து - கேரளா சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்! - Tenkasi Coutralam Distance
கேரளாவிற்கு சுற்றுலா சென்ற கார் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் விபத்து
விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்தோர் தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து புளியரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!