தென்காசி:சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவரின் 307-வது பிறந்தநாள் விழா இன்று (செப் 1) கொண்டாடப்பட்டு வருகிறது. பூலித்தேவர் சிலைக்கு அவரது வாரிசுதாரர் சிபி உள்ளமுடையார் துரை சார்பிலும், ஊர் மக்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அதிமுக, திமுக, மதிமுக, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் அமைச்சர், முன்னாள் அமைச்சர், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் வருவாய் துறை அமைச்சர் கே. கே. எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல் முருகன், அமமுக சார்பில் அதன் நிறுவனர் டிடிவி தினகரன், அய்யாதுரை பாண்டியன் பேரவை நிறுவனர் அய்யாதுரை பாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.