தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆலங்குளத்தில் கிணறுதோண்டும் பணியில் 3 பேர் பலி - வெடிபொருட்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம் - Tenkasi District Today News

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும்போது வெடி வெடித்து 3 பேர் உயிரிழந்தனர்.

ஆலங்குளத்தில் கிணறு தோண்டும் பணியில் 3 பேர் பலி
ஆலங்குளத்தில் கிணறு தோண்டும் பணியில் 3 பேர் பலி

By

Published : Feb 16, 2023, 3:54 PM IST

தென்காசி:ஆலங்குளம் அடுத்து ராம் நகரில் பால் என்பவர் தோட்டத்தில், கிணறு வெட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை சக்திவேல் என்ற ஒப்பந்ததாரர் செய்து வருகின்ற சூழ்நிலையில், இன்று கிணறு ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக டெட்டனேட்டர் வெடிபொருள் கொண்டு பணியை மேற்கொண்டுள்ளனர்.

பணியின்போது கிணற்றில் வைத்த வெடி மருந்து எதிர்பாராதவிதமாக வெடித்த விபத்தில் தொழிலாளிகள் அரவிந்த், ஆசிர் சாலமன் ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், அந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜலிங்கம் என்பவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதனால் பலியானவர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் கலைமணி, தடயவியல் அறிவியல் இயக்குநர் ஆனந்தி, ஆலங்குளம் வட்டாட்சியர் ஓசோனா பெர்னாண்டஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கிணறு வெட்டுவதற்கான முறையான அனுமதி பெறவில்லை எனவும்; உள்ளாட்சித்துறை அமைப்புகளிடம் இதுதொடர்பான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும், அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. முறையாக அனுமதி பெறாமல் கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டதால் நில உரிமையாளர் பால் என்பவரை ஆலங்குளம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்பின்னர், இந்த சம்பவ இடத்தில் டெட்டனேட்டர் வெடி மருந்து வெடிக்காமல் இருப்பதாகவும், அதனை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, அதனை அப்புறப்படுத்த பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:தஞ்சையில் ஆன்லைன் மூலம் ஹைடெக் விபச்சாரம்.. 2 பெண்கள் உட்பட மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details