தென்காசி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருப்பதால் பல்வேறு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்துவருகின்றனர். அதனடிப்படையில், தென்காசி மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்கள் 2,620 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்காசியில் ஊரடங்கை மீறிய 2,620 பேர் கைது - மாவட்ட காவல்துறை - corona update news
தென்காசி: ஊரடங்கு உத்தரவை மீறிய 2,620 பேர் கைது செய்யப்பட்டு 1,994 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

curfew-violation-in-tenkasi
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கைது செய்யப்பட்ட அனைவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து பிற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது என பலமுறை வலியுறுத்தியும் அவற்றை கடைபிடிக்காமல் சுற்றியவர்கள். அப்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது 1,994 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8,089 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 75 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
இதையும் படிங்க:அலட்சியம்! ரூ. 6 கோடியை தாண்டிய அபராத தொகை