தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்துள்ளன. குறிப்பாக வடகரை, பண்பொழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விழுந்துள்ளன.
இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாழை விவசாயி ஒருவர் கூறுகையில், "வடகரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர்.