தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியை தம்பதிகளை கட்டிப்போட்டு 140 சவரன் நகை கொள்ளை - முகமூடியில் வந்த மர்ம நபர்கள் யார்? - Tenkasi Pavoorchatram

தென்காசி அருகே ஆசிரியை தம்பதிகளை கட்டிப்போட்டு 140 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியை தம்பதிகளை கட்டிப்போட்டு 140 சவரன் நகை கொள்ளை - முகமூடியில் வந்த மர்ம நபர்கள் யார்?
ஆசிரியை தம்பதிகளை கட்டிப்போட்டு 140 சவரன் நகை கொள்ளை - முகமூடியில் வந்த மர்ம நபர்கள் யார்?

By

Published : Jul 1, 2022, 5:49 PM IST

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையானூர் சிதம்பர நாடார் தெருவில் அருணாச்சலம் (88) ஜாய் சொர்ண தேவி (83) தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியை தம்பதிகளான இவர்களுக்கு, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 30) இரவு தம்பதிகள் இருவரையும், முகமூடிகள் அணிந்து வந்த மர்ம கும்பல் கட்டி போட்டுள்ளது.

பின்னர் அந்த கும்பல், அவர்கள் வைத்திருந்த 140 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. வழக்கம்போல் இன்று (ஜூலை 1) காலை இவர்களது மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பெற்றோர் கட்டி வைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளனர்.

உடனடியாக அவர்களது மகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர், அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை தம்பதிகளை கட்டிப்போட்டு 140 சவரன் நகை கொள்ளை - முகமூடியில் வந்த மர்ம நபர்கள் யார்?

இதையும் படிங்க:கொள்ளை சம்பவத்தில் ட்விஸ்ட்: கொள்ளையடிக்கப்பட்டது ஹவாலா பணம் எனத் தகவல்

ABOUT THE AUTHOR

...view details