தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுப்பதில் தீவிர சோதனையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் இன்று (மார்ச்.21) தென்காசி மாவட்டம், புளியங்குடி-மதுரை செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.