சிவகங்கையை அடுத்துள்ள காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இவரது நண்பரது ஊரான மட்டாகுளத்தில் தங்கி வந்ததுடன், அங்குள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான வீட்டின் மொட்டை மாடியில் இரவில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதனை அறிந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று(அக்.31) நள்ளிரவில் அங்கு வந்ததுடன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரது தலையை வெட்டி சிதைத்ததுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சத்தம் கேட்ட கிராமத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.