சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் வெல்டிங் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் இவர் காளையார்கோவில் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை - இளைஞர்
சிவகங்கை: முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்குமார்
அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத நபர் வினோத்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் வினோத்குமாருக்கு தலை, கை உள்ளிட்ட இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வினோத்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலையாளி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.