சிவகங்கை:இளையான்குடியை அடுத்துள்ள இளமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா. இவரது கணவர் பெயர் ராஜா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கோகிலா தனது வீட்டில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், கோகிலாவிற்கும் அவரது சகோதரர் காசிநாததுரைக்கும் இடையே சொத்துத் தகராறு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கோகிலா, தனது சகோதரர் மீது இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் கோகிலாவின் சகோதரர் காசிநாததுரை திருவாடானை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிவதால் அவர் மீது இளையான்குடி காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோகிலா குற்றஞ்சாட்டுகிறார்.