தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் - போலீஸ் விசாரணை

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண், திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர்‌ அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
ஆட்சியர்‌ அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

By

Published : Apr 4, 2022, 3:43 PM IST

சிவகங்கை: கல்லல் அருகே கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், வசந்தகுமாரி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு, கல்லல் காவலர் குடியிருப்பு அருகே 10 சென்ட் இடத்தை வாங்கியுள்ளார். அங்கு அவர் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில் அந்த இடம் தங்களுக்குச் சொந்தம் எனக்கூறி அதே ஊரைச் சேர்ந்த 3 தனி நபர்கள் பிரச்னை செய்து வருவதாகத் தெரிகிறது.

இதுதொடர்பான விசாரணை ஆர்டிஓ நீதிமன்றத்தில் நடைபெற்று வசந்தகுமாரிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனையறிந்த மூவரும் வீடு கட்டுவதைத் தடுத்துள்ளனர். இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் குறைதீர்க்கும் முகாமில் புகார் அளிக்க வசந்தகுமாரி சென்றார்.

ஆட்சியர்‌ அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

அங்கு, மேற்குறிப்பிட்ட பிரச்னை குறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தன் கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்‌.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து: 8 பெண்கள் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details