சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடியில் மட்டும் நடைபெற்ற நிலையில், ஆறாம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியை பைந்தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, கலாசாரம், நம்பிக்கை சார்ந்த வரலாற்றை அறியும் வகையில் கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய நான்கு பகுதிகளில் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.
இது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணிகளைத் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " சென்ற முறை பார்த்த சுவர் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது.
அதில், அலுமினியம் அடங்கிய செங்கல் இருந்தது. முதுமக்கள் தாழிகள் இந்த முறை கிடைக்கப்பெற்றுள்ளது. தொழில் நாகரிகமாக நாம் அதைப் பார்த்தோம். இந்த முறை நாம் எடுத்திருக்கும் ஒரு பகுதி முழுமையாக குடியிருப்புப் பகுதியாக இருக்கிறது. மற்றொரு இடம் இடுகாடு பகுதியாக இருக்கும் என கண்டறிந்துள்ளனர்.