சிவகங்கை:இளையான்குடி பஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சதீஷ்குமார் போலந்து நாட்டிலுள்ள உணவகம் ஒன்றில் டெலிவரி வேலைக்காக சென்றுள்ளார். வேலைக்கு சென்ற ஒரு வருடம் வரை சம்பளம் பெற்று வீட்டிற்கு அனுப்பி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வரவில்லை என கூறப்படுகிறது.
மேலும், வேலை பார்த்த இடத்தில் சதீஷ்குமாரை அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் கடந்த 1 வார காலமாக அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்திய வெளியுறவுத்துறையினர் சதீஷ்குமாரின் தந்தை வீரபாண்டியை தொடர்பு கொண்டு தங்களது மகன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.