தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் பயனாளிகளுக்கு 7.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு 7.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி
நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

By

Published : May 24, 2022, 12:39 PM IST

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே சூரக்குடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இவ்விழாவில் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் சுமார் 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மானிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் சூரக்குடி அங்கன்வாடி மையத்தில் ஊட்டசத்தை உறுதி செய் என்ற வாசகத்தோடு ஊட்டச்சத்து சிறப்பு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், "திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார் என்றால் அவரது கடமையை செய்கிறார்.

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

நாம் நமது கடமையை செய்வோம். ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார். அதுவே இந்த அரசின் மீது எவ்வளவு பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். படித்தவர்கள் விமானம் ஏறத்தெரியாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளுகின்றார்கள். அப்படி என்றால் பெருந்தலைவர் காமராஜரை எல்லாம் என்ன சொல்வது" என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, பிரான்மலை ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஸா பானு மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மேட்டூர் அணை நீர் வீணாகாமல் தடுக்க அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details