சிவகங்கை மாவட்டம் உச்சிபுளி உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் எதுவுமே இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
இந்தக் கிராமத்திற்கு சொந்தமான பொதுக் கிணறும் நீரின்றி வற்றியதால், குடிநீருக்கு நான்கு கி.மீ. தூரம் சென்றுதான் தண்ணீர் எடுத்துவரும் நிலை இருந்தது.
தண்ணீர் பிரச்னையால் தவித்த கிராமம்: உதவிய சமூக செயற்பாட்டாளர்! - அறக்கட்டளை
சிவகங்கை: தண்ணீர் பிரச்னை உள்ள கிராமத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் தனது அறக்கட்டளை மூலம் ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுத்துள்ள சம்பவம் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
sivagangai
இது குறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இப்பகுதி மக்களின் துயரம் அறிந்த இக்கிராமத்திற்கு அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் சுந்தர்ராஜ் என்ற சமூக செயற்பாட்டாளர் கிராம மக்களுக்கு உதவ முன்வந்தார்.