மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடெங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பேரணி - மக்களவை தேர்தல்
சிவகங்கை: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
அதன் ஒருபகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இருசக்கர வாகன பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். தனியார் சமூக அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட இந்த இருசக்கர வாகன பேரணி, பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தது.
இந்த பேரணியில், வாக்களிப்பதன் அவசியத்தையும், ஏன் வாக்கிற்கு பணம் பெறக்கூடாது என்பதையும் வலியுறுத்தி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும், இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.